Type to search

Headlines

கிளிநொச்சியில் டிப்பருடன் மோ.சைக்கிள் விபத்து

Share

கிளிநொச்சியில் டிப்பர் வாகனத் துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் தாயார் உயிரிழந்ததுடன் மகள் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து, நேற்றுக் காலை 10.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது.

பூநகரி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கிளிநொச்சியிலிருந்து யாழ் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64 வயது) என்ற வயோதிபப் பெண் உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள துடன், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link