Type to search

Headlines

வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசு கைவிட்டுள்ளது

Share

ஜனாதிபதி கோட்டாவின் நிர்வாகம் ஆபத்தான வெறுப்பைத் தூண்டுவதாக குற்றம் சாட் டியுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவுக்கான இயக்குநர் மீனாட்சி கங்குலி உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்காக இலங்கை வழங்கிய வாக்குறுதி களை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் சமீப காலமாக அதி கரித்துக் காணப்படும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாரபட்சம் மற்றும் குரோத பேச்சுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசாங்கம் தற்போது கொரோனா வைரஸினை பயன்படுத்தி மத ரீதியிலான பதட்டத்தை அதிகரிக்க முயல்வதுடன் மத சுதந்திரத்தை மீறுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனாவினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்ய வேண்டும் என அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் முஸ் லிம்களின் நம்பிக்கைக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கங்கள் இதனைச் செய்ய வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், இது மத உரிமையை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்து வதற்கான வழிவகைகள் குறித்து பகிரங்க கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் பொதுமக்கள் மீது மீண்டும் குரோத உணர்வு தோன்றுவதை தடுக்க வேண்டியது குறித்தும் ஆராயப்பட்டன.

எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரசாங்கம் கண்மூடித்தனமான கொள்கைகளைப் பின்பற்றி வருகிறது எனவும்,இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் பாதுகாப்பு செயலாளராக விளங்கிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது யுத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அவரது நிர்வாகம் ஆபத்தான வெறுப்பை தூண்டுவதற்கு பதிலாக, நேர்மையான நல்லிணக்கத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link