இராணுவம் மீது யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது
Share
பெளத்த சமயத்தால் இலங்கை வளம் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக், இராணுவம் மீது சர்வதேச அமைப்புக்கள் எவையும் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என போர் வீரர்கள் விழாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 11 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றைய தினம் 11ஆவது போர் வெற்றி தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைக்கப்பட்டுள்ள தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் சர்வதேச அமைப்பு அல்லது நிறுவனமொன்று தொடர்ந்து ஈடுபட்டு வருமானால் அவற்றை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒருபோதும் தயங்க மாட்டேன்.
இராணுவத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பிற்கும் நாட்டில் இடமிருக்காது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“20 ஆண்டுகால இராணுவ சேவையின் பின்னர், 10 ஆண்டுகள் பாதுகாப்புச் செய லாளராகவும் குடிமகனாகவும் எங்கள் போர் வீரர்கள் செய்த உறுதிப்பாட்டை நான் முழுமையாக அறிவேன்.
போரின் வேதனையை நான் நன்கு அறிவேன். எனவே, இலங்கை மக்களுக்கு அமைதி கிடைக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த போர் வீரர்களின் கௌரவத்தை பறிக்கும் எந்த முயற்சியையும் நான் அனுமதிக்க மாட்டேன்.
எனது அரசின் கீழ் நாட்டின் போர் வீரர்களின் கௌரவம் எப்போதும் பாதுகாக்கப்படும் என்றார்.