இராணுவம் துப்பாக்கிச் சூடு இளைஞர் ஒருவர் படுகாயம்
Share
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை இராணுவத்தினரின் சைகையை மீறி நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிர யோகத்தில் இளைஞர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத் தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் உள்ள மந்திகைச் சந்தியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றது.
இதில் புலோலி தெற்கு, முறாவில், மாவடியைச் சேர்ந்த 23 வயதுடைய பசுபதி அனுஷன் என்பவரே துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை மந்திகை சந்தியில் இராணுவத்தினர் கடமையில் இருந்துள்ளனர். இரவு 11 மணிக்கு அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இருவரை காவல் கடமையில் இருந்த இராணுவத்தினர் மறித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கற்கள் மற்றும் டோச் லைட்டால் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் கடமையில் இருந்த ஒரு இராணுவச் சிப்பாய்கையில் உடைவுநிலை ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டார்.
இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற் கொண்டு தப்பிச் சென்றவர்களை தேடுமுகமாக அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
அதிகாலை அப்பகுதியூடாக மோட்டார் சைக்கிள் ஒன்று வருவதை கண்ட இராணு வத்தினர் அதை நிறுத்துமாறு சைகை காட்டிய போது நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு வீட் டுக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்தே அவர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இளைஞனின் உடலில் மூன்று காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.