Type to search

Headlines

பொலிஸாரின் தடையை மீறி தீபங்கள் ஏற்றி நினைவேந்தல்

Share

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் தீபங்கள் ஏற்றி நேற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது.

பொலிஸாரின் தடையை மீறி நேற்று இரவு 7 மணியளவில் தீபங்கள் ஏற்றி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்.பல்கலைக் கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் பொலிஸார் ஒரு மணி நேரமாக காத்திருக்க, பல்கலை கழக பிரதான வாயிலில் மாணவர்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்த ஏற்பாடு செயப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 6 மணி முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் உட்செல்லும் வாயில் முன்பாக கோப்பாய் மற்றும் யாழ்ப்பாண பொலிஸாரினர் காத்திருந்தனர்.

பொலிஸார் அங்கு காத்திருக்க மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் திட்டமிட்டபடி இரவு 7 மணிக்கு பிரதான வாயில் முன்பாக சுட ரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மாணவர்கள் அஞ்சலி செலுத்தி முடியும் தருவாயில், பிரதானவாயிலில் நிகழ்வுகள் நடைபெறுவதனை அறிந்து கொண்ட பொலிஸார் அவ் விடத்திற்கு விரைந்து நிகழ்வினை தடுக்க முற்பட்டனர்.

அப்போது மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் மூவர் தாம் நிகழ்வு முடிந்து திரும்புகிறோம் எனக் கூறி செல்ல முற்பட்ட வேளை அவர்களை புகைப்படம் எடுத்த பொலிஸார் அடையாள அட்டைகளை வாங்கி விபரங்களை குறிப்பெடுத்து கொண்டனர்.

அத்துடன் இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவது சட்டவிரோதமானது, மாணவர்களாக இருப்பதனால் உங்களை கைது செய்யவில்லை.

இல்லை எனில், உங்களை கைது செய்து மூன்று மாத காலம் வரையில் தடுத்து வைக்க கூடிய அதிகாரம் எமக்குண்டு என கடுமையாக மாணவர்களை பொலிஸார் மிரட்டி அனுப்பினர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் பொலிஸார் சுகாதார அறிவுறுத்தல்களை காரணம் காட்டி நிகழ்வுகளை குழப்புவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link