Type to search

Headlines

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன்

Share

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரனுடனான சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பிலுள்ள பிரதமரின் இல்லத்தில் இடம்பெற்றது.

கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனானசந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை பிரதமர் அவர்கள் சுமந்திரனிடம் கேட்ட றிந்ததோடு முழுமையான விபரங்களை தன்னிடம் சமர்ப்பிக்கும்படி கேட்டிருந்தார்.

இதனடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் முழு விபரங்களும் முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர் அம்பிகா சற்குணம் அவர்களின் பங்களிப்புடன் உறுதி செய்யப்பட்டு முழுமையான அறிக்கை ஒன்றினை சுமந்திரன் பிரதமரிடம் கையளித்தார்.

இந்த கைதிகளின் வழக்குகள் முடிவிற்கு வந்தவர்கள் தொடர்பில் தான் ஜனாதிபதியுடன் பேசுவதாகவும் சுமந்திரன் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசுமாறும் கேட்டுக் கொண்ட பிரதமர் ஏனையோர் தொடர்பில் தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடார்பில் சுமந்திரனோடு கலந்துரையாடிய பிரதமர் புதிய அரசியல் யாப்பு ஒன்றிணை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க வுள்ளதாகவும் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதிக்கும் இதனை உறுதி செய்துள்ள தனையும் சுட்டிக்காட்டினார்.

புதிய பாராளுமன்றம் கூடுகின்ற போது இது தொடர்பிலான நடவடிக்கைகளை தாம் ஆரம்பிக் கின்ற போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இந்த முயற்சிகளுக்கு அத்தியாவசியமாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கி ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இடம் பெறுகின்றபோது அத்தகைய நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள தேசிய பிரச் சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதன் அவசியத் தினையும் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கைதி களின் விடுதலை தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link