ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் நடத்தப்படுமா? இல்லையா?
Share
கோவிட் – 19 என்ற கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து நாளை 12ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல்கள் ஆணைக்குழு நாளைய தினம் அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய
தலைமையில் கூடவுள்ளதுடன் நாளை தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடை பெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் பொதுத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான ஆபத்து குறையும் முன்னர் தேர்தலை நடத்துவது பொருத்த மற்றது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கு பதிலாக பழைய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்கு அமைய தேர்தலை நடத்தும் முறையில் மாற்றம் செய்ய வேண்டுமாயின் தேர்தல் சட்டத்தில் சில விடயங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதால் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப் படலாம் என பேசப்பட்டு வருகிறது.