Type to search

Local News

வயோதிபப் பெண் மீது இராணுவம் தாக்குதல்

Share

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதுடன் வீட்டில் இருந்த வயோதிபப் பெண் மீதும் தாக்குதல் நடத்தியதோடு வீட்டு உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் பின்னிரவு இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான வயோதிபத் தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் அடித்து நொறுக்கி சேதப் படுத்தியுள்ளனர்.

அதேவேளை, இராணுவத்தினர் தாக்குதல் நடத்திவிட்டு செல்லும் போது, தமது இரண்டு அலைபேசிகளையும் இராணுவ தொப்பி ஒன்றினையும் தவறவிட்டு சென்றுள்ளதாகவும் வீட்டார் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப் பொங்கல் நாளன்று இராணுவச் சிப்பாய் ஒருவர் பொதுமகனால் தாக்கப்பட்டார்.

அச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை தேடியே இராணுவத்தினர் சுற்றி வளைப்பில் ஈடுபட்டனர்.

அதன் போதும் அந்நபர் கைது செய்யப்படவில்லை. சுமார் நான்கு மாத காலப்பகுதியாக அவரை கைது செய்ய இராணுவத்தினர் பல வழிகளில் முயற்சித்தும் அந்நபரை இராணுவத்தினரால் கைது செய்ய முடியவில்லை.

இந்நிலையிலேயே அவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த இராணுவத்தினர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link