அலரி மாளிகைக்கு வருமாறு மகிந்தவின் அழைப்பை நிராகரித்த ஜே.வி.பி
Share
எதிர்வரும் 4ஆம் திகதி திங் கட்கிழமை அலரி மாளிகையில் நடக்கவிருக்கும் கலந்துரையாடலுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நிராகரித்துள்ளது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தமது நிலைப் பாட்டை விளக்கி நேற்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
அதில், ஜே.வி.பியின் எம்.பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது.
கொரோனா அனர்த்தத்தை வெற்றி கொள்ள அரசியலமைப்பின்படி செயற்பட்டு ஆணை கோருவதற்கும், நிலைமை குறித்து விவாதிப்பதற்கும் பதிலாக மகிந்தவின் இல்லத்தில் 225 எம்.பிக்களும் கூடி பலனில்லையென்பதை அநுரகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா நிலைவரத்தை சமாளிப்பது, மக்களிற்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஆராய ஜனாதிபதி, பிரதமரின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதே பொருத்தமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
அலரி மாளிகைக்கு 225 எம்.பிக்களையும் அழைத்து பேசி, அரசியலமைப்பு நெருக்கடியை தீர்க்க முடியாது.
எனவே, அரசியலமைப்பின்படி பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் அல்லது இது போன்ற நெருக்கடிகளில் ஜனாதிபதி எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து உயர்நீதி மன்றத்தில் கருத்து கேட்க வேண்டுமென அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.