நாடு இயல்பு நிலையடைந்தால் ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும்
Share
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற வேண்டுமானால், குறைந்தபட்சம் மே 15 ஆம் திகதிக்குள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதை தெரிவித்துள்ளார்.
நாடு இயல்பு நிலைக்கு வந்த பின்னர் குறைந்தது 35 நாட்களுக்கு பின்னரே தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று கூறினார்.
பொதுத் தேர்தலை நடத்த சுகாதார அதிகாரிகளின் முழுமையான பரிந்துரை அவசியம் எனவும் கூறினார்.
மேலும், தேர்தல் ஆணைக்குழு தேர்தலில் திருப்தி அடைய வேண்டும், அரச அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் திட்டங்களை பரிசீலிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், தேர்தல் ஆணைக்குழு இப்போது தேர்தல்களுக்கான முன்னேற்பாடு களை மேற்கொண்டு வருவதாகவும், தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் செயற் படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று ஆணைக்குழு முடிவை எடுக்கவில்லை, நாட்டின் சுகாதார நிலைமைகளை மறுஆய்வு செய்ய தேர்தல் ஆணைக்குழு 10 நாட்களுக்கு ஒரு முறையாவது கூடும் என்றும் கூறினார்.
தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். போட்டி நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு நம்புகிறது.
தேர்தலை ஒத்திவைப்பது சாதகமான ஒன்றல்ல, ஆனால் சுகாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால், பொதுத் தேர்தலுக்கான மற்றொரு நாளில் நடத்த தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்றார்.