கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
Share
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஓரிரு நாட் களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணங்களை விளங்கிக் கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் ஹவெயிடம் தெரிவித்தார்.
நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சீன பதில் தூதுவர் சந்தித்தார்.
இதன்போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொரோனாவுக்கு பிந்திய இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பு வதற்கு சீனாவின் மத்திய அரசு ஒத்துழைப்பும் அந்நாட்டின் முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் சீன பதில் தூதுவர் தெரிவித் தார்.
கோவிட் – 19 நோய்த்தொற்றின் தற் போதைய நிலைமைகள் குறித்து சீனாவின் பதில் தூதுவர் வினவியதற்கு பதிலளித்த ஜனாதிபதி,
மொத்தமாக நோக்கும்போது நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த ஓரிரு நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தமைக்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி, அந்த நிலைமைகளை விளங்கிக்கொண்டு உரிய பரிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
‘ஜனாதிபதி அவர்களே நாம் உங்களுடன் இருக்கின்றோம்’ என பதில் சீன தூதுவர் இந்த சுமுகமான கலந்துரையாடலின் இறுதியில் தெரிவித்தார்.