எதிர்த்தரப்பினர் அரசியல் அமைப்பு நெருக்கடியை தோற்றுவிக்க முயற்சி
Share
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் அமைப்பு நெருக்கடியை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள் என கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார்.
ஜனாதிபதியால் மாத்திரமே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை, புதிய அரசாங்கம் தோற்றம் பெற முன்னர் கூட்ட முடியும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மாற்று வழிமுறைகளைத் தேடுகின்றனர்.
நாடு பாரிய சவால்களை எதிர்க் கொண்டுள்ள நிலையில் அரசியல் அமைப்பு ரீதியான நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை தொடர்ந்து முடக்க முடியாது.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த அரசாங்கத்தையே பொறுப்பேற்றுள்ளோம்.
கொரோனா வைரஸை காரணம் காட்டி அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசியல் சூழ்ச்சியை முன்னெடுக்கின்றனர்.
பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய சிறந்த திட்டங்கள் அனைத்தும் விரைவில் செயற்படுத்தப்படவுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.