Type to search

Local News

சஜித் பெப்ரவரியில் எச்சரித்ததை அரசு செவிமடுத்திருக்க வேண்டும்

Share

பெப்ரவரியில் சஜித் பிரேமதாஸ கடந்த பெப்ரவரி மாதம் எச்சரித்ததை அரசாங்கம் செவி மடுத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்குத் தெரியும், கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி எதிர்க் கட்சி என்ற வகையில், சஜித் பிரேமதாஸ கொரோனா விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஜனவரி மாதத்தில்தான் சீனாவின் வுஹானில் இந்த வைரஸ் தோற்றம் பெற்றது.

பின்னர் பெப்ரவரியில் தென்கொரியாவுக்குப் பரவியது.

இதனால், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எச்சரித்திருந்தார்.

உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வைரஸை கட்டுப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

விமான நிலைய பயணக்கட்டுப்பாடு, அனைவரும் முகக்கவசம் அணிவது, ஜனாதிபதி செயலணியை உருவாக்குவது என முக்கியமான மூன்று காரணங்களை தெரிவித்திருந்தார்.

எனினும், இதற்கு சுகாதார அமைச்சரால் பலவீனமானதும் பொறுப்பற்ற வகையிலும்தான் இதற்கான பதில் வழங்கப்பட்டது.

சுற்றுலாத்துறையைக் கட்டுப் படுத்துவதை விடுத்து, தங்களின் வருமானத்திற்காக சுற்றுலாத் துறையை அதிகரிப்பது தொடர்பாகத்தான் அரசாங்கத்தால் கவனம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, ஏப்ரல் 19 ஆம் திகதியுடன் வைரஸ் பரவலை முற்றாகக் கட்டுப்படுத்திவிட முடியும் என சுகாதார அமைச்சர் கூறியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள் தான் இலங்கையில் இடம்பெற்றது.

இவர்கள் தேர்தலை விரைவில் நடத்துவதில் தான் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்திலேனும், அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாயை செலவழிக்க முடியுமாக இருந்தால், அந்தப் பணத்தை கஷ்டப்படுபவர்களுக்கு வழங்க முடியும்.

பொதுத் தேர்தல் நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையிலேயே, அரசாங்கம் இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள அக்கறை காட்டி வருகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link