ஈரான் நாடு தற்போது கடுமையான நெருக்கடியில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்க ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபை கொண்டு வந்துள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்ற ஒன்று என அவர் விமர்சித்துள்ளார். ...
முழு ஐரோப்பிய பிராந்தியம் முழுவதும் சாதனை படைக்கும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை தாக்கங்களினால், கடந்த சில நாட்களுக்குள் பிரான்சில் மட்டும் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது. பிரான்சின் பெரும்பான்மையான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கடுமையான ...
ஈரானிய எண்ணெயை விற்பனை செய்வதற்கு தற்காலிகமாக அனுமதிக்கும் வகையில், அமெரிக்க திறைசேரி திணைக்களம் இன்று நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அந்தப் பொருள் மீது பொதுவாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நீக்கும் 60 நாட்களுக்கான “பொது உரிமம்” ஒன்றையும் வெளியிட்டுள்ளது. “சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளுக்கு இணங்க, ஹோர்முஸ் நீரணையில் சுதந்திரமான ...
பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் தமது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (22) காலை லண்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார். தற்போது அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தமது ...
AI இன் உதவியுடன் தலை ஒட்டிப்பிறந்த இரட்டைப்பிறவி சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரட்டை சகோதரிகள் கடந்த 2023ம் ஆண்டு நைஜீரியாவில் பிறந்துள்ளனர். தலைப் பகுதியில் ஒட்டிப்பிறந்த இவர்களை பிறப்பில் சத்திரகிச்சைக்கு உட்படுத்துவதில் மருத்துவ ரீதியிலான சிக்கல்கள் காணப்பட்டன. இந்நிலையில் மூளை திசுக்கள் மாத்திரமன்றி இரத்த குழாய்களும் ...
பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. வழமைப்போல் பாடசாலை இயங்கி வந்த நிலையில், 2 மர்ம நபர்கள் திடீரென உள்ளே ...
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள வால்மார்ட் அங்காடி ஒன்றில் பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அங்குள்ள பொலிஸாருக்கு அவசரத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அங்கிருந்த ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்து வெளியிட்ட கருத்து காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலிய பிரதமர் தன்னுடன் புகைப்படம் எடுப்பதற்காக கெஞ்சியதாகவும், அந்தப் புகைப்படத்தை எடுத்ததில் ...
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே இன்று (19) முதல் போர் நிறுத்த உடன்படிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் ...
அமெரிக்காவுக்கும் – ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் ...