தமிழகத்திலிருந்து கடல்வழியாக இலங்கைக்குள் நுழைந்து யாழ்.சுழிபுரத்தில் பதுங்கியிருந்த நபர் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் நேற்றும் +2,530 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் தீர்மானிக்கவில்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இன்று (நேற்று) இரவு 11 மணி முதல் நாளை (இன்று) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சில சமூகவலைத்தளங்களில் ...
நெல்லியடியில் எழுமாற்றுப் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று. புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் எழுமாற்றுப் பரிசோதனை யில் 6 பேருக்கு கொரோனா. சாவகச்சேரி வைத்தியசாலையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு தொற்று. யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 72 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில், பௌத்த துறவிகள், வெலிஓயா சிங்கள மக்களின் வழிபாட்டுடன் இராணுவத்தின் முழுமையான பாதுகாப்புடன் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்ச்சையினை ஏற்படுத்திய குமுழமுனையில் அமையப்பெற்ற குருந்தூர்மலையில் ஆண்டு தொடக்கத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வாராய்ச்சி பணிகள் ...
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் ஆறு மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த வகுப்பில் உள்ள மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ...
நெல்லியடி நகரில் உள்ள பிரபல வெதுப்பகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் வெதுப்பகம் சுகாதாரப் பகுதியினரால் நேற்று திங்கட்கிழமை சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் நெல்லியடி நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை மாலை கிடைக்கப் பெற்றது. ...
கொரோனா விதிகளை மீறி குருந்தூர்மலையில் விகாரை புனருத்தாபனம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நேற்று இரவோடிரவாக பிரித்ஓதல் நிகழ்வும் இடம்பெற்றது அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் முல்லைத்தீவு தண்ணி முறிப்பு குருந்தூர்மலை பகுதியில் கோவிட் – 19 விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக் கணக்கான ...
துரிதமாக அதிகரித்து வரும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் அதிரடியாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார். கோவிட்-19 பர வலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த ...
யாழ்.பருத்தித்துறை நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் நகர சபை முடக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் நகர சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சுகாதார முற்பாதுகாப்பு நடவடிக்கையாக நகர சபை முடக்கப்பட்டுள்ளதுடன் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் ...