கவச வாகனங்களை தகர்க்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த நிலக்கண்ணி வெடி ஒன்று சாவகச்சேரி நுணாவில் பகுதியில் நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டு வளவு ஒன்றில் குழி தோண்டும்போது அங்கு சந்தேகத் திற்கிடமான பொருள் இருப்பதை அறிந்த வீட்டு உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கி யுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு ...
வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் மானிப்பாய் பொன்னாலை வீதியில் சென்று கொண்டிருந்த போது சந்தேக நபர்கள் 6 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் வாள்வெட்டுக் குழு சந்தேக நபர்களுக்கு ...
பாராளுமன்றத்துக்குள் எந்த வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் தமது கருத்துக்களை தெரிவிக்க சுதந்திரம் உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றின் முதல் அமர்வில் ஆற்றிய உரையை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குமாறு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றில் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையில் சபாநாயகர் ...
இலங்கையுடன் இணைந்து பயணிக்க நோர்வே அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் நோர்வே தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் டீரீன யுரன்லி எஸ்கடேல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பை மேற்கொண்டார். கொழும்பு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இன்றைய தினம் (27) இடம்பெற்றது. பாராளுமன்ற தேர்தலில் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கணித புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார் . நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் கடந்த வருடம் ...
யாழ்.மாவட்டத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த வாரத்தில் 6 பேர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூரத்தி சற்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் ...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமையை டிரம்ப் வழங்கினார். இந்திய குடியுரிமை பெற்ற பெண் இன்ஜினியருக்கும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந் தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுக் காலத்தின் பின்னர் கூடவிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு ள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள் ...
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நான்கு மாத காலத்திற்கான இடைக்கால கணக்கறிக் கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான இரு நாள் பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 2021ஆம் ஆண்டுக்கான புதிய வரவு ...
நெல்லியடி பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக, துன்னாலை பகுதியில், நேற்று அதிகாலை மேற் கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். இதன்போது, அவரது வீட்டில் இருந்து இரண்டு பெரல்களில் 300 லீற்றர் கோடா கைபெற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை ...