அபேஜன பலவேகய கட்சியின் தேசியபட்டியல் விவகாரத்தில் தேசிய தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர், அத்துரலியே ரத்ன தேரர் மற்றும் வேதிரிகம விமல திஸ்ஸ தேரருக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அபேஜனபல வேகய கட்சியின் தலைவர் சமன் பெரேரா ...
தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், ...
துபாயில் போலீஸ் துறையின் தண்டனை மற்றும் சீர்திருத்த மையத்தின் சார்பில் ஜெயில் கைதிகளுக்கு நெசவு தொழில் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் போலீஸ் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்தாவது:- துபாயில் உள்ள மத்திய சிறைச்சாலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜெயில் கைதிகள் பல வகையான குற்றங்களுக்காக ...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கு இன, மத மற்றும் அரசியல் தலைவர்களுடன் பரந்தளவிலான கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கரு ஜயசூரிய அதில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்: பத்திரிகைச் செய்திகளின்படி அரசியலமைப்பின் 20 வது திருத்தம், அதற்கு ...
இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பலின் தீ கட்டுப் பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் ஏற்றியபடி இந்தியாவிற்கு சென்ற பனாமா நாட்டை சேர்ந்த எம்டி நியூ டயமண்ட் கப்பல் இரு நாட்களுக்கு முன்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்திருந்தது. இதில் ஒரு கப்பல் பணியாளர் பலியான ...
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் வழங்கிய பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தருமபுரம் பகுதியில் 10 லீற்றர் கசிப்பினை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பப் பெண் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் புளியம்பொக்கணைப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 520 லீற்றர் கோடாவும் ஒர் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது ...
இலங்கையில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட் டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3111 ஆக அதி கரித்துள்ளது. இதேவேளை, நேற்றையதினம் மேலும் 06 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரு ம்பியுள்ள நிலையில் பூரணமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 2889 ...
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 530 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளு டன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவிலில் வீடொன்றில் ஹெரோயின் விற்பனை இடம்பெறுவதாக விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய அந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது வீட்டில் வைத்து ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ...
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டத்தரணி தர்சன வெரதுவேஜ் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சமூகங்களிடையே இன அல்லது மத வெறுப்பைத் தூண்டும் வகையில் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கியதற்காக விக்னேஸ்வரன் மீது அவர் முறைப்பாடு ...