யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் நேற்றுக் காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் க்ரீட்டில் பகுதியில் வசித்து ...
நாடுமுழுவதும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் நாளை வியாழக்கிழமை திறப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை அனைத்து மருந்தகங்களும் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து திரும்பிய 51 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த தேகு நகரிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் நோயாளிகளுக்கு நோய் பரவிய தல்ல எனவும் அவர்களுக்குள் இருந்த வைரஸ் மீண்டும் செயற்பாட்டுக்கு ...
கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் இரு வார காலத்துக்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதிமுறை களும் கட்டுப்பாடுகளும் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து, சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய ...
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச ...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனோ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்தில் ...
யாழ்.மாவட்டத்தில் தொடர் ஊரடங்கினால் அத்தியாவசிய பொருட்களின் திடீர் விலை உயர்வு, தட்டுப்பாடு மற்றும் பதுக்கல் தொடர்பான முறைப்பாடுகளையடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசாரணை உத்தியோத்தர்களினால் நேற்று பல விற்பனை நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் நியாயமான விலைகளில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதற்கான வழி வகைகள் மேற்கொள்ளப்பட்டு வர்த்தக ...
அத்தியாவசிய நுகர்வு பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது ஊரடங்குச்சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உல்லாசபயண விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கம்பஹா செயலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாட லின் போது ...
அமெரிக்காவின் நியூயோர்க் சிட்டியிலுள்ள வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா தற்போது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் நேற்றுக் காலை நிலவரப்படி சுமார் 3 இலட்சத்து ...
நியூயோர்க் மாகாணத்தில் கொரோனா வைரஸிக்கு 2 நிமிடத்துக்கு ஒருவர் வீதம் பலியாகி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்; எண்ணிக்கை 4 இலட்சத்தை நெருங்கி வருகிறது. இதே வேளை பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கிவருகிறது. நியூயோர்க் மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரஸிக்கு பலியானோர் ...