தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் பாராளுமன் றத்தில் ஆற்றிய கன்னி உரையை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவது குறித்து தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மல்வத்த மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்பு நேற்று ஊட கங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். அலவ்வ, இராவண, தம்புத்தேகம, நீர்கொழும்பு, கதங்கொட மற்றும் பாதுக பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பத்து நபர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 10,924 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் செய்தித் ...
யாழ்.போதனா வைத் தியசாலையில் 101 பேருக்கு நேற்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 பேருக்கே கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளரை மாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து கலந்துரை யாடியபோது, இந்த முடிவிற்கு வந்தனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் நேற்று மாலை இடம்பெற்ற ...
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நேற்றைய பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றிருந்தது. பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப் பட்டிருந்தார். நேற்று ஜனாதிபதியின் கொள்கை உரை மீதான விவாதம் பாராளுமன்றில் இடம்பெற்றிருந்தது. இதற்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரான அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கியமை ...
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப் பிற்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு மிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம் பெற்றது. இந்த சந்திப்பு ...
குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து மொத்தமாக 745 இலங்கையர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான ஞசு-668 என்ற விமானத்தின் மூலம் 20 இலங்கையர்கள் நேற்று அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க ...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 நாட்கள் விசேட பயிற்சி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 9 ஆவது பாராளுமன்றம் ஜனநாயமிக்கது ...
ஒன்பதாவது பாராளுமன்றின் முதல் அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிலையில் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு முதன் முறையாக பாரா ளுமன்ற உறுப்பினர் கோட்டே மதுர விதானகே படகு மூலம் பாராளுமன்றுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்றுக்கு இவ்வாறு வருகை தந்த அவர், படகு மூலம் தாம் வருவதற்கு ...
ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறுகையில், ஒரே நாடு என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய ...