கரடியனாறு பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரை நேற்று (07) கைதுசெய்துள்ளனர். நேற்று குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியதுடன் சித்தாண்டியைச் ...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, நாட்டின் தற்போதைய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் ...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகர சபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு ‘லஞ்சீற்’ பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவு நிலையத்துக்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில், வீடொன்றில் அனுமதியின்றி உணவு ...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நேற்றய தினம்(07) குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 10ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றய தினம் நடைபெற்றது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த என்பு கூடுகளில் இரண்டு ...
நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கும் நடைமுறைக்கான விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் நேற்று (07) அங்கீகாரம் வழங்கியுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன, இன்று (08) கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லமொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கபில சந்திரசேன தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து கொள்ளுப்பிட்டி ...
சிலாவத்துறை, சவரியபுரம் கடற்கரை அருகே சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் 2,500,000 ரூபா பெறுமதியான உலர்ந்த மஞ்சளுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக, மன்னார் விசேட அதிரடிப்படை முகாமின் வடக்கு மாகாண விசேட ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணை வழங்குவதற்காக, அவரது உறவினர்கள் எனப் பொய்கூறி முன்னிலைப்பட்ட இருவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கபில சந்திரசேனவின் பிணை நிபந்தனைகளின்படி, அவரது நெருங்கிய உறவினர்கள் மூவர் ...
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று (07) மாலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்த நிலையில் கரை ஒதுங்கியிருப்பதை நேற்று மாலை 5.00 மணியளவில் அவதானித்த ...
பாடசாலை மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதன் காரணமாக, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை இன்று (08) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில், நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார். இதற்கமைய, ...