நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், இந்த அனர்த்த நிலைமை ...
இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ...
இன்றைய தினத்தின் புதிய தரவு பகுப்பாய்வுகளின்படி, இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து திணைக்களம் தொடர்ந்து அவதானித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, ...
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்த காலப்பகுதியை விடவும் தற்போது ரூபாயின் பெறுமதி மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அரசாங்கம் தனது சொந்த தத்துவத்திற்கு பதிலாக வெளிநாட்டு ...
ஆகஸ்ட் மாதம் வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கான எரிபொருள் தேவைக்கான கோரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் ஆறாவது கூட்டம் நேற்று (15) கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ...
ஆசிரியர் சேவையை இந்நாட்டின் அதிக சம்பளம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் கொண்டு வருவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். வனாதவில்லுவ, நாகமடுவ மகா வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் ...
முழு நாடுமே ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 176,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் (14) வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 176,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ...
108 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள ‘கொக்கெய்ன்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வௌிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (15) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் இந்த போதைப்பொருளை ‘பசுமை வழி’ ஊடாக வெளியே கொண்டு செல்ல முற்பட்ட ...
இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த ஆண்டின் எந்தக் காலப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் ...
மலையகத்தில் பெய்து வரும் கடும் மழையையும் பொருட்படுத்தாது, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (14) மதியம் 12.30 ...