டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது. ...
இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது. நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது காணப்படும் மழைக்காலநிலை, அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22) அதிகாலை 5.30 மணிக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை மீறி, 75 மில்லியன் ரூபாய்க்கும் அதிக சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ...
அடுத்த வாரமாகும்போது மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகளால் (Basis points), அதாவது 0.5% அல்லது 1% இனால் அதிகரிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று (21) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ளார். வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், ...
தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2026 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் ...
நாட்டில் மூன்றில் ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இலங்கையில் பதிவாகும் மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களாலேயே நிகழ்கின்றன என சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீனி அலகப்பெரும நேற்று (20) நடைபெற்ற ...
வரதட்சணை கொடுமை காரணமாக யாழில் 19 வயது இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாழ் – நாவாந்துறை பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தான் இரு வருடங்களாக காதலித்த நபரை நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் திருமணம் செய்துள்ளார். எனினும் கணவனின் தாயார் பெண்ணை ஏற்றுக்கொள்ளாத நிலையில் ...
செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (21) ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் ...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மிச்சிநகர், ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றில் வீடு கட்டுவதற்காக, நேற்று (20) அத்திவாரம் தோண்டும்போது, நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த கைத்துப்பாக்கி மற்றும் வாள் ஒன்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த காணியில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றைய தினம் (21) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 354 இலங்கை ரூபாயைக் கடந்துள்ளதுடன், அது 354.03 ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அதேநேரம், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ...