கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், 2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதலாம் தரத்திற்கான பாடத்திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கி முடிக்கப்பட்டுள்ளன. மாகாண ஆரம்பக்கல்விப் பாடப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், ...
போதைப்பொருளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் நெடுநாள் மீன்பிடி படகொன்று, 4 சந்தேக நபர்களுடன் திக்கோவிட்ட துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த படகை கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து முழுமையாக சோதனையிட்ட போதே, அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த அளவை ...
நடப்பு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர்.வைஷாலி பட்டம் வென்றார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற இந்த கேண்டி டேட்ஸ் செஸ் தொடரில், நேற்றுமுன்தினம் இறுதிச்சுற்றில் ரஷ்யாவின் ...
மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தரநிலைப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை மாற்றியமைத்து வாகனங்களைச் செலுத்துவோருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.புதிதாகப் பதிவு ...
குருநாகல் – நிக்கவரெட்டிய – தெதுரு ஓயாவில் நீராடச்சென்று காணாமல் போன மேலும் நால்வரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன தெதுறு ஓயாவில் நேற்று வியாழக்கிழமை (16) நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானார்கள். நீரில் மூழ்கி காணாமல் போனவர்களில் மேலும் 4 பேரின் சடலங்கள் ...
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டுக்குள் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின்படி அறிமுகப்படுத்தப்பட்ட கலப்பு விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல் ...
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வைத்து வன்முறை குழுவை சேர்ந்த மூவர் நேற்று வாள்களுடன் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மூவரும் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தாக்குதல் நடாத்துவதற்கு தயாரிகினர். இது குறித்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தவகையில் அதிரடி ...
இஸ்ரேலும் லெபனானும் 10 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தம் (EST) மாலை 17:00 மணிக்கு (22:00 BST) ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார். இந்தத் தீர்மானத்தின் ...
குருநாகல் – நிக்கவரெட்டிய பகுதியில் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இருவர் உயிரிழந்ததுடன், 6 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று (16) மாலை 15 பேர் நீராடச் சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீராடச் சென்ற ...
நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டு வந்த சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் ஆறு சீனப் பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...