மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் மூலம் 97,500 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக அதன் முகாமை ...
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாளை 17 ஆம் திகதி பொதுமக்களுக்கான எந்தவித சேவைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பிராந்திய அலுவலகங்களிலும் நாளை பொதுமக்களுக்கான சேவைகள் முன்னெடுக்கப்படாது ...
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இன்று (16) காலை திருகோணமலை சிவன்கோவிலடியை வந்தடைந்தது. இதன்போது பொதுமக்கள் அன்னாரது உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, தீபச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து திருகோணமலையின் முக்கிய பகுதிகளிலும் அவருடைய உருவப்படத்திற்கு ...
நாட்டில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளை, போர்ச் சூழல் தணிந்தவுடன் கூடிய விரைவில் குறைக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் ஊடகங்களிடம் ...
ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ...
இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் வீதியில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் என்பவரின் மகளான சியா குலேரியா, வழமைபோல கல்லூரிக்குச் செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இரண்டு ரி-56 ரக மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் ...
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெலிகம பகுதியில் களனி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று புதன்கிழமை (15) குறித்த நபர் தனது உறவினர்கள் சிலருடன் நெலிகம பகுதியில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது அவர் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இது ...
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இந்த வழக்கில் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்று நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த ...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பல்நகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15.04.2026) மாலை சுமார் 4.00 மணியளவில், கிளிநொச்சி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் அம்பல்நகர் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ...