இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், வரும் ஏப்ரல் 19 முதல் 20 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளார். ...
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய வருடாந்த ஒப்பந்தத்தில், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நடத்தையை மையப்படுத்தி பல்வேறு புதிய விதிகள் மற்றும் நிபந்தனைகளை சேர்க்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் வீரர்களுடனான ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், தற்போது தயாரிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் வீரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ...
அமெரிக்காவில் 2023 முதல் தற்போது வரை, நாசா மற்றும் அணு ஆய்வு மைய விஞ்ஞானிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் என, 10 பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று, கடந்த வாரம் வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவின் ...
நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. ...
ஜெர்மனியின் புகழ்பெற்ற சொகுசு கப்பல் MS Amadea, தனது தொடர் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காலை சுமார் 900 பயணிகளுடன் காலி துறைமுகத்தை வந்தடைந்தது. பஹாமாஸ் நாட்டின் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கப்பல், 580 பயணிகளையும் 315 பணியாளர்களையும் சுமந்து வந்துள்ளது.அவர்களில் பெரும்பான்மையான சுற்றுலாப் ...
பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவிற்குள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (17) காலை 8.00 ...
பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்துகளில் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்காக பிரத்தியேக அட்டைமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை ...
தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய, விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இன்று (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த இருவரினதும் ...
தென் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்று (17) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் 400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ...