அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் நேற்று முன்தினம் 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், ...
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரெலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை ...
சீனாவின் பீஜிங் நகரில் மனிzதர்களும் ரோபோக்களும் மரதன் ஓட்டத்தில் பங்கேற்ற விசித்திரமான நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் தமது போட்டியாளர்களான மனிதர்களை பின்தள்ளி ரோபோக்கள் முன்னிலைப் பெற்றன. இதில் வெற்றிபெற்ற Lightning என்ற மனித ரோபோ சீனாவின் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை தயாரிக்கும் Honor நிறுவனத்திற்குரியது. குறித்த ரொபோ ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மின்னல் ...
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்றிலிருந்து 100 லீற்றர் மண்ணெண்ணெயை வெல்லவாய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் மண்ணெண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, பஸ் நடத்துனர் பொலிஸாரால் ...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு முன்னால் உள்ள வீதிக்குள் காணப்படும் வயலில் இருந்து ஆணொராவரது சடலம் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டது. சடலமாக காணப்படுபவர் யாரென தெரியவராத நிலையில், அவருக்கு அண்ணளவாக 50 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா ...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய பிரென்ட் ரக மசகு பீப்பாய் ஒன்றின் விலை 96.25 டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக காணப்படுகிறது. ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் ...
பெந்தோட்டை கடலில் நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (19) காலை பெந்தோட்டை கடற்கரைப் பகுதியில் ஏனைய நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என ...
அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணித்ததுள்ளார்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ...