வடக்கு மாகாணத்திற்கு வெளியே ஒருவர் மரணித்தால் உடலை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவந்து இறுதிச் சடங்கை நடத்த வேண்டுமாயின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள பிரதேசத்தின் சுகாதார வைத் திய அதிகாரியின் முன் அனுமதி பெறப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். குறித்த அனுமதியை வழங்குவதற் ...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை வீதியில் சிறப்பு அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது வாள்கள் 03 கைப்பற் றப்பட்டதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நண்பகல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் ...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு கட்டளை வழங்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு நேற்று மீள கையேற்கப்பட்டது. பிரதிவாதி விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவருடைய கட்சியிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். அதனால் இந்த மனுவின் ஊடாக நீதிமன்றின் நேரத்தை வீணாக்க ...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரியை இன்று (நேற்று) நள்ளி ரவு முதல் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக் கையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் ...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை நீதிமன்றப் பிடியாணை பெற்று கைது செய்யு மாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க போக்கு வரத்துச் சபையின் பேருந்து களில் இடம்பெயர்ந் தோரை அழைத்துச் சென்றதன் அடிப்படையில் பொது நிதி களை குற்றவியல் ...
அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள யோசனைகயில் உள்ள யோசனைகள் மற்றும் தேவையான திருத்தங்கள் இறுதி வரைபில் சேர்க்கப்பட்டு சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...
20ஆவது திருத்தம் மூலம் சர்வாதிகார ஆட்சி உருவாகும். இது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இதனை நிறைவேற்ற விடமாட்டோம் என அரசுக்கு எதிராக மகா சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அமரபுர நிகாயா மகா சங்கம், ராமஞ்ஞா நிகாயா மகா சங்கம் மற்றும் இலங்கை அமரபுர ராமஞ்ஞா சாமக்ரி சங்க சபை ...
நாட்டில் அண்மைய நாட்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் ஒரு நபரிலிருந்து மற்றொருவருக்கு எளிதில் தொற்றுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸைப் பற்றி ஆராய்ந்து வரும் மருத்துவ வல்லுநர்கள், தற்போது பரவிவரும் வைரஸின் தீவிரம் மிக அதிகமாக இருப்பதாகவும், அது வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடுமெனக் ...
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்கத் தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உயிர் வாழும் காலம் என ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ள காலத்தை விட அதிகம் என அவுஸ்திரேலிய தேசிய விஞ்ஞான ...
கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து நாடு முழுவதுமுள்ள கல்வியியற் கல்லூரிகள் தனிமைப்படுத்தல் மையங்களாக மாற்றப்பட்டுவருகிறது. அந்தவகையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியும் தனிமைப்படுத்தல் மையமாக மாற்றப்படவுள்ளது. இன்று இராணுவத்தினரால் இக்கல்லூரி பொறுப்பேற்கப்படவுள்ளது. தற்போது சுமார் 400 ஆசிரிய பயிற்சி மாணவர்கள் கோப்பாயில் கல்வி கற்று வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ...