மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்களுடன் தொடர்புடைய மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கம்பஹா கொத்தணி கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 53 ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடைய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட அலைபேசியில், பிரான்ஸில் தங்கியுள்ள நவாலியைச் சேர்ந்த ஒருவரால் பல வன்முறைச் சம்பவங்களை அங்கிருந்து கொண்டு இயக்குவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன், ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக்கட்டத்தையடைந்த போது சமரச முயற்சியில் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராஜா மற்றும் பல்கலை நிர்வாகம் ஈடுபட்டபோது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் ...
கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய தீர்மானங்கள் ஏதும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் அச்சம் கொண்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தேவைக்கு மேலதிகமாக கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அவர் ...
கல்கந்த தனிமைப்படுத்தப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யக்கலவைச் சேர்ந்த 64 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையத்திற்கு குறித்த பெண் கொண்டு செல்லப்பட்டார். தனிமைப்படுத்தல் மையத்திற்கு சென்ற 10 நிமிடங்களில் அந்தப் பெண் இறந்துவிட்டதாக ...
மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ்.புங்குடுதீவுக்கு 30ஆம் திகதி வந்த பெண்ணுடன் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட 384 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மினுவாங்கொட ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் யாழ். புங்குடுதீவுக்கு வந்திருந்த இரு பெண்களில் ஒரு பெண் கொரோனா தொற்றுக்குள்ளானார். இதேவேளை மற்றைய ...
யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் குழு வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளது. வாள்கள், கம்பிகளுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் வீட்டிலிருந்த பொருட்கள் மீதும் ...
கம்பஹா மினுவாங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் மேலும் 196 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடந்த மூன்றரை நாட்களில் மினுவாங்கொட தொற்றுப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1028 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 729 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் ...
யாழ்ப்பாண குடாநாடு எந்நேரமும் முடக்கப்படலாம். பொது மக்கள் அவசர நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ.மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி நேற்று அவசரமாக கூடியது.குறித்த கூட்டத்திலேயே அரச அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டம் தற்போதைய ...
கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்ட புங்குடுதீவு யுவதிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் வெளியாகியுள்ளது. மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவு யுவதிகள் இருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததாக வடக்கு சுகாதார ...