நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று வியாழக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது. கந்தானையைச் சேர்ந்த 70 வயது டைய ஆண், கொழும்பு-12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் ...
திருநெல்வேலி, பலாலி வீதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றுப் பிற்பகல் மீட் கப்பட்டுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளை களின் தந்தையான நாகமணி பெருமாள் (வயது-76) என்ப வரே சடலமாக மீட்கப்பட்டவராவார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாள் நினைவேந் தலை அனுஷ்டிக்க நாம் யாரிட மும் அனுமதிபெறத் தேவை யில்லை என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தெரிவித்துள் ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். “உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களை நினைவுகூருவதனை யாரும் தடுக்க முடியாது. அதேபோல ...
நாட்டில் கொரோனா தொற்றால் நேற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் – 19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை +401 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி ...
முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட தன் எதிரொலியாக முல்லை நாகஞ்சோலை பகுதியில் 180 ஏக்கர் காடு அழிப்பு அம்பலமாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட ஊடக வியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவர் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் நீதி மன்றின் உத்தரவின் பேரில் முல்லைத்தீவு பொலிஸார் ...
வவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் மரணமடைந்துள்ள நிலையில் அப் பெண்ணின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி ஹரிப்பிரசாத் தெரிவித்தார். வவுனியா மறவன்குளத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த ...
மக்கள் மீன் சாப்பிடுவதற்கு அச்சப்படத் தேவையில்லை, தாராளமாக மீன் சாப்பிட லாம் எனக் கூறியிருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆராய்ச்சி பச்சையாக மீனைச் சாப்பிட்டுக் காட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட மீன்பிடித் துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் ...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளை பெற்றுள்ளனர். 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரும் சிங் கள மொழி மூலமாக பரீட்சைக்குத் தோற்றியவர்கள்.புலமைப்பரிசில் பரீட்சை வரலாற்றில் முதன்முறையாக 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சேவை செலவினங்களுக்காக 2.678 ரில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யும் முன்மொழிவுடன் இன்று பாராளுமன்றில் முன்வைக்கப்படுகிறது. பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ஷ, 2021 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் ஒரு வருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட வவுனியா பம்பைமடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரிடம் பெறப்பட்ட மாதிரிகள் ...