சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்த முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான இப்பெண் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். ...
ளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர், தொடர்ச்சியான தனிநபர் பரதநாட்டிய நிகழ்ச்சியால் உலக சாதனையை நிலைநாட்டினார். ஐந்தே வயதான நாட்டிய தாரகை ரஜீவன் ஹம்சத்வனி, 6 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக தனிநபராக பரதநாட்டியம் ஆடியுள்ளார். இந்த சாதனை முயற்சி நேற்று ...
கிளிநொச்சி நகரப் பகுதியில் 21 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக புகைப் பொருட்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் சிறுவர்களை இலக்கு வைத்து சிகரெட் மற்றும் பீடி உள்ளிட்ட புகைப் ...
மதிப்புமிக்க 2026 “SCO கோடைகால சமையல் கலைஞர்கள் போட்டியில்” இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. ஜூன் 26-27 தேதிகளில் சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திறமையான சமையல் கலைஞர்கள் பங்கேற்றனர். சீனாவின் ...
சவூதி அரேபியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தி அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு நேற்று (28) விபத்துக்குள்ளாகியுள்ளது. ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 14 பேரும் உயிரிழந்துள்ளதாக ...
7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இன்று நேற்று (28) அதிகாலை வெளியேற முற்பட்ட போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது ...
கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்துத் துன்புறுத்திய சந்தேக நபரை, கல்முனை தலைமையகப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (27) மாலை இடம்பெற்றுள்ளதுடன், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பிரதம பரிசோதகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 21 வயது ...
உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். நேற்றுமுன்தினம் (27) டல்லாஸ் நகரில் ஜோர்டான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்ததன் மூலம், அவர் ஜஸ்ட் ஃபோன்டைன் மற்றும் ஜெய்ர்சின்ஹோ ...
வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட அடுத்தடுத்த சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளது. இதனை அந்நாட்டின் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்த இயற்கை பேரிடரில் 3,238 பேர் காயமடைந்துள்ளதாகவும், 3,142 குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் ...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் (27) விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள நிர்வாகத்தினர் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர்களுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் ...