தம்மைத் தாக்கியதாக தெரிவித்து மூவரைப் பிடித்து இராணுவத்தினர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். உரும்பிராய்ப் பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினருக்கு நேற்று மாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய்ப் பொலிஸார் தெரி வித்தனர். இராணுவத்தினரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ...
முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரத்தில் சாதித்த மாணவன் ஒருவன் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ...
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி ...
நாட்டில் கொரோனா அச்சம் முழுமையாக குறைவடைந்ததை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்திய பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலை ...
கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் பெருமளவு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் அந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடைகள் மற்றும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் மனித எச்சங்கள் காணப்பட்டன. அவற்றுடன் துப்பாக்கிகளும் காணப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் காணப் ...
எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்புசார் இனப்படுகொலை ஒன்று தமிழர்களுக்கு எதிராக இடம்பெறவுள்ளதற்கான முன் அறிகுறியே கோட்டாவின் போர் வெற்றி நாள் அறிவிப்பு என நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந் தேன், ஐ.நா மனித உரிமைகள் சபையினூடான ...
நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றும் நாளை மறுதினம் திங்கட்கிழமை நாடு முழுவதும் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் ...
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தான் அதனை செய்ய மாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் தேவையேற்படின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டேன் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத் திலேயே அவர் மேற்கண்டவாறு ...
கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதால், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் சமைத்த போசாக்கு உணவுக்குப் பதிலாக உலர் உணவுப் பொதிகளை பெற்றோர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ் ஏற்பாடு மே மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்பிரகாரம் ஒவ்வொருமாண வருக்கும் 10 முட்டை, ஒரு கிலோ நூடில்ஸ், ...
வல்வெட்டித்துறைப்பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கொள்ளையடித்த பெருமளவு பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அப்பகுதிகளை சேர்ந்த 23, 24 மற்றும் 26 வயது உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்களினால் கொள்ளையடிக்கப்பட்ட ...