கர்ணனே தனது மிகப்பெரிய பலம் எனத் துரியோதனன் நினைத்திருந்தான். கர்ணனிடம் இருக்கக்கூடிய நாகாஸ்திரம் அவ்வாறானதொரு நம்பிக்கையை துரி யோதனனுக்குக் கொடுத்திருக்கலாம். எனினும் யார் தன்னுடைய பலம் என்று துரியோதனன் நம்பினானோ அவன் சாபம் பெற்றவனானான். ஆம், உற்றபோது கற்றது மறப்பாய் எனப் பரசுராமர் விதித்த சாபம் போர்க்களத்தில் வேலை ...
பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணனை மறந்ததனாலோ அன்றி அறம் பிழைத்ததனாலோ என்னவோ கொரோனாத் தொற்று பார்க்குமிடமெங்கும் பரவிக் கிடக்கிறது. நீக்கமற நிறைந்திருக்க வேண்டியதை உதறிவிட்டால், தீங்கிழைக்கக்கூடிய தீயவையே எங்கும் குடியிருக்கும். இதுவே உண்மைத் தத்துவம். இப்போது எங்கு பார்த்தாலும் கொரோனா என்பதே செய்தி. அதிலும் கொரோனாத் தொற்று உறுதி ...
இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் போது சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட மகிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்ற உரையில், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்; இந்த நாட்டின் ஆதிக்குடிகளின் தாய்மொழியான தமிழால் உங்களை வாழ்த்துகிறேன் எனக் கூறியிருந்தார். இலங்கை மண்ணின் ஆதிக்குடிகள் தமிழர் என்று ...
மஞ்சளும் இஞ்சியும் தமிழர் வாழ்வில் முதன்மைமிக்க ஔடதங்கள். இதில் மஞ்சள் தமிழர்களின் வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. மஞ்சள் மாவை குழைத்து அதில் அறுகம் புல் சாத்தி அதனைப் பிள்ளையாராக ஆவா கணம் செய்து வழிபடுகின்ற நடைமுறை நம்மிடம் உண்டு. இதற்கு மேலாக, திருமாங்கல்யதாரணத்தின்போது தாலியின் தகைமையை மஞ்சள் பெற்றுக் ...
நாடு முழுவதும் கொரோனாத் தொற்றினால் உறைந்து போயுள்ளது. கம்பஹாவில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று வீரியம்மிக்கதென்ற மருத்துவர்களின் எச் சரிக்கையும் அடுத்து வரும் நாட்கள் மிகப் பெரும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதாக சுகாதார அமைச்சு விடுக்கின்ற அபாய அறிவிப்புகளும் மனதைப் பதற வைக்கிறது. கட்டுங்கடங்காமல் கொரோனாத் தொற்றுப் பரவினால், ...
தமிழர்களின் வாழ்வில் தேர் என்பது மிகுந்த முதன்மை கொண்டது. ஆலயத் திருவிழாக்களில் தேரில் இறை வனை ஆரோகணிக்க வைத்து, ஊர் கூடி வடம் இழுத்து மகிழ்வடைகின்ற தேர்த் திரு விழா திருவிழாக்களுக்கெல்லாம் தலை யானது. தவிர, நம் தமிழ் மன்னர்கள் தேரில் பவனி வருவதை மன்னர்க்குரிய மாண்பாகக் கருதி ...
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய நாள் இன்று. பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன் பிருந்து உயிர்த்தியாகம் செய்த அந்த உத்த மனின் நாமம் இறப்பின்றி வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேவேளை உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இயலுமை உண்டென்று எவரும் நினைத்து விடக்கூடாது. மாறாக, புனித ...
தேவலோகக் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் செய்ததாக ஒரு கற்பனை. குழுவில் இந்திரன், பிரம்மா, நந்தி, யமன், சித்திரகுப்தன், நாரதர் ஆகிய ஆறு பேர் அடங்கியிருந்தனர். தேவலோகக் குழுவினர் இலங்கைப் பாராளு மன்றப் பக்கமாக தங்கள் விஜயத்தை ஆரம் பித்தனர். யமன்: சித்திரகுப்தா இதென்ன ஒரே சத்தமும் கூக்குரலுமாக ...
இலங்கை பெளத்த சிங்கள நாடு என உரிமை கொண்டாடப்படுகிறதெனில் அங்கு சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென நம்புவது மடமைத்தனமாகும். பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டை தமக்குரியதென உரிமை கொண்டாடுகின்ற சிறுமைத்தனம் ஆட்சியாளர்களிடம் இருக் கும்போது அங்கு அடிமைத்தனம் இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. இங்கு ...
அரச நிறுவனங்களின் செயலொழுங்கும் மக்களுக்கான அவற்றின் பணிகளும் இன்ன மும் மந்தமும் காலதாமதமும் உடையதாகவே இருந்து வருகிறது. அரச நிறுவனங்களின் நுழைவாயில் களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நோக்கக் கூற்று, பணிக்கூற்று என்பவற்றைப் பார்க்கும் போது மாலை ஆறு மணிக்கு முற்பட்ட ஆட்டோ சாரதி வடிவேலு போல இருக்கும். அந்தளவுக்கு பண்பு, ...