திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகரில் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றிவளைப்பில் இவர்கள் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு ...
திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்த தீவிரத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை திறைசேரி செயலாளர் ...
வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கிய குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 ...
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகரசபையில் நேற்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியாதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. மன்னார் நகரசபை தலைவர் வசந்தன் தலைமையில் ...
கற்றவர்கள் கயவர்களாக இருந்தால் இந்த மண் தாங்காது என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஒருமுறை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தபோதே இதனை அவர் கூறியிருந்தார். ஆம், கற்றவர்கள் கெடுதியாளர்களாக இருப்பார்களாயின் அவர்கள் கெடுதிகளை – தீங்குகளை – ஈனத்தனங்களை கனகச்சிதமாகச் செய்து முடிப்பர். அவ்வாறு அவர்கள் மிகவும் நுட்பமாக கெடுதிகளைச் ...
1) தையிட்டி விகாரைக் காணிகள் மீண்டும் தமிழ் மக்களுக்குக் கிடைக்காதா வியாசரே? செல்வன்-தையிட்டி தையிட்டி விகாரை விடயம் தமிழ் மக்களுக்கு சாதகமானதாய் வருவது போல இருந்தது. அதற்கு நயினாதீவு மற்றும் யாழ்ப்பாண விகாரையின் விகாராதிபதிகளின் பிரசன்னமும் வலுச் சேர்த்திருந்தது. என்னவோ தெரியவில்லை இப்போது அவர்களும் அமைதியாகி விட்டனர். அது ...
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது. பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பலபிட்டிய ...
வாத்தியார் வைத்திலிங்கம் தலைமையில் ஆலடி மாநாடு கூடியது. மாநாட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஆலடிக்கு வந்திருந்தனர். இறைவணக்கத்துடன் ஆலடி மாநாட்டை ஆரம்பிப்பம் என்று வாத்தியார் கூற, அனைவரும் எழுந்துநின்று இறைவணக்கம் செலுத்தி அமர்ந்தனர். தொடர்ந்து பண்டிதர் பரமலிங்கம் எழுந்தார். இலங்கை நிர்வாக சேவையில் அதி உயர்பதவிகளை வகித்தவரும் நயினாதீவு நாகபூசணி ...