அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரது மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை ...
மே மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 46,606 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்டுள்ள புதிய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 18,533 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 40% ஆகும். ...
வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஹஆரகம, உல்கந்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. உல்கந்த மலைப்பகுதியின் பெரும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், மண் மேடுகளும் பாரிய மரங்களும் வேரோடு பெயர்ந்து கீழே சரிந்து விழுந்துள்ளதை காணமுடிகிறது. இந்த நிலச்சரிவு நிலைமை குறித்து உடனடியாக ஆராய்ந்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளை ...
வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன், அமெரிக்காவின் “51 வது மாநிலமாக” சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளக் கணக்கில் ட்ரம்ப் இந்த வரைபடத்தைப் பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் ...
அமெரிக்கா தனது சமாதானத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும், இல்லையெனில் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானுடனான போர்நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து ஈரான் இதனைத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர் மத்திய ...
நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத்தில் தற்போது எவ்வித தட்டுப்பாடும் ...
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசு மீதான நம்பிக்கை கோரும் வக்கெடுப்பு இன்று (மே 13) காலை 9.30 மணிக்கு நடைபெறும் என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. இன்று பேரவை தொடங்கியதும் பெரும்பான்மை நிரூபிப்பதற்கான தொடக்க உரையில் முதலமைச்சர் விஜய் பேசுவார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை ...
தமிழக மக்களின் நலன்கருதி மதஸ்தலங்கள், கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பஸ் தரிப்பிடங்களுக்கு அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கமைய தமிழகத்தில் 717 மதுக்கடைகள் மூடப்படவுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் பிரச்சார காலத்தில் தான் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில் ...
சுமார் 48 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று (13) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று ...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். இவ்வாறு ...