இன்று மே 18. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள். வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடும் போரில் எம் தமிழ் உறவுகள் துடிதுடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறி இன்று 12 ஆண்டுகள் நிறைவாயிற்று. எனினும் எங்கள் உறவுகளின் நினைவுகள் காலம் கடந்து போகாமல் அப்படியே இருக்கின்றன. ஓ! தமிழின அழிப்பாக நடந்த ...
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 322 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் நேற்று 926 பேருக்கு நடத்தப்பட்ட கொவிட் – 19 பரிசோதனையில் 322 ...
இன்று மே 18 யாழ்.பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக் கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தீவிர கண்காணிப்பை மீறிச் செயற்படுவோர் மீது சட்ட நடவடிக்கைகள் ...
நாடு முழுவதும் மீண்டும் முழுநேர பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதன்படி 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை 11 மணிமுதல் 25ஆம் திகதி செவ்வாய் அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும்,மீண்டும் அதேநாள் 25 ஆம் திகதி இரவு ...
பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச் சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை விரைவில் திறக்க வேண்டுமாயின் பாடசாலைகளுக்குள் போதியளவு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், ஏனைய மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு ...
தமிழினப் படுகொலை நாளான மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உயிரிழந்த உறவுகளை நினைவு கூர முடியும் என முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் ஆண்டுதோறும் மே 18ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. ...
எதிர்வரும் ஜூன் மாதத்தில் கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் பரவல் நிலைமை அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மற்றும் பெண்நோயியல் துறையின் பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தொற்று நோயின் தீர்மானகரமான சந்தர்ப்பத்தை நாடு என்ற வகையில் எதிர் நோக்க நேரிடும் எனவும் ...
முன்னர் அறிவிக்கப்பட்டவாறு இன்று திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனைக் கூறினார். கடந்த வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் அமுலில் ...
யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த 4 மாதக் குழந்தை ஒன்று அதிகாலை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் வசிக்கும் தாயார் ஒருவருக்கு கடந்த 4 மாதங்களிற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களை வழமைபோன்று அதிகாலை 12 மணியை தாண் டிய நிலையில் பால் ஊட்டி தாயார் நித்திரையாக்கினார். ...
யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கு நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார். வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் ...