யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதையடுத்துஇளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே அங்கிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கைத்துப்பாக்கி எதற்காக அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்தது? ஏதேனும் பாரிய குற்றச்செயல்களைப் ...
திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று பிற்பகல் ...
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மீண்டும் இணையும் பத்திரண! இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதற்காக அவர் விரைவில் இந்தியா புறப்படவுள்ளார். அண்மையில் நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ...
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடப்படும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். ...
பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் வெலிகந்த சுசிரிகம பிரதேசத்தில் சொகுசு பேருந்து ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். சுசிரிகம பிரதேசத்தில் வசிக்கும் ...
கொழும்பில் சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் சென்ற 07 பஸ்கள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டது. கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நடமாடும் சோதனை ...
வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பாலத்திலிருந்து லொறி ஒன்று கவிழ்ந்ததில், அதன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1.00 மணி முதல் 2.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கட்டுப்பொத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீரிகம, ...
நாடுகளின் முன்னேற்றம்,அந்த நாட்டு மக்களின் பழக்கவழக்கம், அவர்களிடம் இருக் கக்கூடிய இரக்க சிந்தனை, மற்றவர்களுக்கு உதவி செய்கின்ற மனப்பாங்கு என்பன அந்த நாட்டு மக்கள் எந்தளவு தூரம் பொது விதிமுறைகளைப் பின்பற்றுகின்றனர் என்பதைப் பொறுத்துள்ளது. ஆம், அபிவிருத்தியடைந்த நாடுகளை ஒரு கணம் நோக்கினால், அந்த நாட்டு மக்கள் பொதுவிதிகளைப் ...
அமெரிக்கா- ஈரான் இடையில் இரண்டு வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் நிறுத்தம் எப்போது வேண்டுமென்றாலும் முறிவடையலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது. இதற்கிடையே இரண்டு நாடுகளுக்கும் இடையில் நேற்று முதல் இன்று அதிகாலை வரை 21 மணி நேரம் நீடித்த போர் நிறுத்த பேச்சுவார்த்தை உடன்படிக்கை எட்டப்படாமல் ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவ மாவட்டங்களிலும் கடும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (12) நண்பகல் விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும். பிற்பகல் 1.00 மணிக்கு மேல், ...