யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களிற்கும் பொலி ஸாருக்குமிடையில் நேற்று முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது. யாழ்.பல்கலைகழக நுழைவாயிலில் நேற்று மதியம் கூடியிருந்த மாணவர் களை பல்கலைக்கழகத்திற்குள் உள்ளே நுழையும்படி பொலிஸார் அவர்களை அறி வுறுத்தியுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்த போது, மாணவர்களை ...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிர மணியம் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி ...
தியாகி திலீபன் உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய நாள் இன்று. பன்னிரெண்டு நாட்கள் உண்ணாநோன் பிருந்து உயிர்த்தியாகம் செய்த அந்த உத்த மனின் நாமம் இறப்பின்றி வாழும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அதேவேளை உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமே இயலுமை உண்டென்று எவரும் நினைத்து விடக்கூடாது. மாறாக, புனித ...
தேவலோகக் குழுவொன்று இலங்கைக்கு திடீர் விஜயம் செய்ததாக ஒரு கற்பனை. குழுவில் இந்திரன், பிரம்மா, நந்தி, யமன், சித்திரகுப்தன், நாரதர் ஆகிய ஆறு பேர் அடங்கியிருந்தனர். தேவலோகக் குழுவினர் இலங்கைப் பாராளு மன்றப் பக்கமாக தங்கள் விஜயத்தை ஆரம் பித்தனர். யமன்: சித்திரகுப்தா இதென்ன ஒரே சத்தமும் கூக்குரலுமாக ...
தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிறிகாந்தா விடம் யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக் கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு விதிக்கப் பட்ட ...
சாப்பிடும்போது ரொட்டித் துண்டு தொண்டைக்குள் சிக் கிக் கொண்டதால் மூச்சுத் திணறி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக் கிழமை தருமபுரம் பகுதியில் இடம்பெற் றுள்ளது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய கந்தையா தெய்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக் காக கிளிநொச்சி ...
தமிழ் இன நலன் கருதி உயிர் நீத்த மற்றும் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூர தொடர்ச்சியாக விடுக்கப்படும் தடைகளையும் மறுப்பையும் எதிர்த்து ஜனநாயக வழியில் அனைத்து தமிழ் மக்களும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக நாளை சனிக்கிழமை பிரார்த்தனை நாளாக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பிரகடனப்படுத்தியுள்ளன. இறந்த ...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு இடமளிக்க வேண்டும் என்ற காரணிகளை உள்ளடக்கி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொண்டு வந்த யோசனை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் நடத்திய நிலையில், சபாநாயகர் ...
இலங்கை பெளத்த சிங்கள நாடு என உரிமை கொண்டாடப்படுகிறதெனில் அங்கு சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுமென நம்புவது மடமைத்தனமாகும். பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாட்டை தமக்குரியதென உரிமை கொண்டாடுகின்ற சிறுமைத்தனம் ஆட்சியாளர்களிடம் இருக் கும்போது அங்கு அடிமைத்தனம் இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத உண்மை. இங்கு ...
கிணற்றில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித் துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று புதன்கிழமை மாலை சக் கோட்டை, அல்வாய் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இராயப்பு அன்ரனிதாஸ் (வயது- 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனிமையில் வசித்து வந்த மேற்படி குடும்பஸ்தர் அருகில் உள்ள ...