உகாண்டாவின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் வசித்து வருவதாக அந்நாட்டு உளவுத்துறை அரசுக்கு தகவல் வழங்கிய நிலையில், நாட்டின் வடக்குப் பகுதிகளில் சட்டவிரோதமாக வசித்து வருபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதன்போது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 62 கைது செய்யப்பட்டுள்ளனர்.தலைநகர் கம்பாலா அருகில் உள்ள ஒரு ...
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. படவிளக்கம் கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்றைய தினம் மீண்டும் ...
2026 ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடைப்பிரிவு கடற்கரை மல்யுத்தப் போட்டியில் நிபுணி வாசனா இன்று (29) தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வியட்நாமின் டுவாங் தி கிம் அன் (Duong Thi Kim Anh) ...
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகரில் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டை பிடித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றிவளைப்பில் இவர்கள் ...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு ...
திறைசேரி கணக்கிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அழைப்பு விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்த தீவிரத்தைக் கருத்திற்கொண்டு நாளை வியாழக்கிழமை திறைசேரி செயலாளர் ...
வவுனியா, தோணிக்கல் ஆலமரம் பகுதிக்கு அருகிலுள்ள ரயில்வே கடவையில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தோணிக்கல் ரயில்வே கடவையை முதியவர் ஒருவர் கடக்க முயன்றபோது, ரயிலுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் சிக்கிய குறித்த முதியவர் சம்பவ இடத்திலேயே ...
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 ...
மன்னார் மாவட்ட உள்ளூர் கள் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் நகரசபையில் நேற்று (28) மதுவரித் திணைக்கள அதிகாரிகள்,மன்னார் பொது சுகாதார வைத்தியாதிகாரி, கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றது. மன்னார் நகரசபை தலைவர் வசந்தன் தலைமையில் ...
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்புகளின்போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் கையிருப்பு, இன்று (27) பகிரங்கமாக அழித்தொழிக்கப்பட்டது. பலபிட்டிய மற்றும் சிலாபம் ஆகிய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பலபிட்டிய ...