இன்று ஏப்ரல் 6ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 10ஆம் திகதி வரை வீட்டிலிருந்து பணியாற்றும் வாரமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னர் மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரையும் மார்ச் 30ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3ஆம் ...
தாவடியில் கொரோனா வைரஸ் தொற்றுச் சந்தேகத்தில் பரிசோத னைகளுக்குட்பட்படுத்தப்பட்ட 18 பேருக்கும் கொரோனாத் தொற்றில்லையென நேற்றைய தினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். தொற்றுள்ளதென அடையாளம் காணப்பட்ட முதலாவது நபர் வசிக்கும் பகுதியில் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள 18 பேரின் இரத்த மாதிரிகள் கொரோனாத் ...
கனடாவில் கொரோனா (கோவிட் -19) தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் மரண மடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். ஒன்ராரியோ மாகாணத்தின் கிங்ஸ்ரன் வைத்தியசாலையின் ஆலோசகராக இவர் கடமையாற்றியிருந்தார். ஏற்கெனவே வைத்தியர் கடமையில் இருந்து இளைப்பாறிய இவர், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட வைத்தியர்களுக்கான ...
கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றால் மேலும் 9 பேர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 176ஆக (ஜன வரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உட்பட) அதிகரித்துள்ளது. ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கின்ற காரணத்தினால் புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையை சரியாக அறிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா ...
சுவிஸ் மத போதகரினால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும்போது ...
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத் தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து ஆலய மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. ...
தனிமைப்படுத்தல் நிலையங் களில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப் பிடிக்குமாறு இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் ...
புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கொரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை. எதிர் வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் ...
கொழும்பு முழுவதையும் முடக்க உயர்மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் கொழும் பில் வசிப்பதனால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.