கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்கு போன்ற ஒரு முக்கியமான விட யத்தில், நாட்டின் அனைத்து சமூகங்களுடனும் கலந்துரையாடிய பின்னரே தீர் மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களை தகனம் செய்யலாமா? அல்லது அடக்கம் செய்யலாமா? என்பதை ...
மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் உடுவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோத னைகளில் அவருக்கு ...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகைத் தீபம் ஏற்றிய மாணவன் கோப்பாய் பொலிஸா ரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணை யில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு நேற்றிரவு 7.45 மணியளவில் கைது ...
காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் ஒரு வரின் சடலம் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். மற்றையவர் தொடர் பில் தகவல் கிடைக்க வில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் ...
வடமராட்சி, வல்லிபுரம் குறிச்சி யில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மதியம் வீடு புகுந்த ரௌடிக்குழுவொன்று வீட்டுக் கும், உடைமைகளிற்கும் சேதம் ஏற்படுத்திவிட்டு, முதியவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றது. இவ்வாறு படுகாயமடைந்தவர் சிங்கை நகர் வல்லிபுரம் குறிச்சியைச் சேர்ந்த ...
நீர்கொழும்பு மஹர சிறைச் சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந் துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸ், விசேட அதிரடிப்படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலைமையை கட்டுப் ...
சங்கானையில் வயோதிபர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற் றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இதில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி (வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ...
நாட்டில் கோவிட் – 19 தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று சனிக்கிழமை இரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட்-19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ளது. 79, 96 வயது டையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டில் நேற்றும் 487 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை 296 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதால் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது. நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று முன்தினம் தாக்கல் செய்த மனுக்களுக்கு அமைய நேற்று இந்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது.