அமெரிக்காவின் WTI (West Texas Intermediate) ரக மசகு எண்ணெய்யை ஏற்றிய கப்பல் எதிர்வரும் மே மாதம் நாட்டை வந்தடையவுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை மீண்டும் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இன்று வர்த்தகம் ஆரம்பமான போது, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent ...
நேற்ற (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 4,765 ரூபாயாகும். 5 ...
கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 826 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாய் பணமும் ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் ...
சுமார் 36 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இரண்டு சீனப் பிரஜைகள் இன்று (05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய சீன ...
எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சிக்கல்கள் மற்றும் இலாபப் பங்கு குறைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை முற்பகல் 9.30 மணி முதல் (06) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை மற்றும் ...
வடக்குக்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி. பிரதீபன் தெரிவித்துள்ளார். மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, ...
இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில், 5,000 ரூபாவிற்கும் குறைவான கியூ.ஆர். (QR) பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (06) முதல் எவ்விதக் கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியினால் நாளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புபவர் அல்லது பெறுபவர் என இருவரிடமிருந்தும் மேலதிக ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் 2010 முதல் 2015 வரையான காலப்பகுதிக்குரிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களை சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு கையூட்டல் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்தச் சொத்து ...