இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 840,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 840,411 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக ...
சுமார் 12 கோடி ரூபா பெறுமதியான 12 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (24) ஹோமாகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த பிரசாத் நிஷாந்த கொலம்பகே என அடையாளம் காணப்பட்டுள்ளார். ...
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ...
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவர்கள் சிறுவர்களாகவே வளர்வதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விளையாட்டுகள், ...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 38.67 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருடன் வருகை தந்த மற்றும் சிலர் இந்த கைது நடவடிக்கையின் பின்னர் அங்கிருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. கைதானவர் கொழும்பைச் சேர்ந்த 27 வயது வர்த்தகர் ...
பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கொழும்பைச் சேர்ந்த 33 வயது இளைஞர், சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் குஷ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்றபோது சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ...
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கான ஆட்சேர்ப்பு தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் நடைபெறவிருந்த குறித்த பரீட்சை, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புதிய பரீட்சை திகதி பின்னர் அறிவிக்கப்படும் ...
திறைசேரி ஊடாக அண்மையில் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் (Hackers) கைகளுக்கு சென்ற சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இளைஞர் குழுவொன்று இன்று (24) நிதியமைச்சின் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டது. அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டிய நிதியமைச்சர் ...
வவுனியா பூந்தோட்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். பூந்தோட்டம் பகுதியில் கடந்த சில தினங்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், நள்ளிரவு வேளைகளில் வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து உள்நுழையும் நபர்கள் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 84.51 ...