சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது (29) இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மொஹமட் சாமீர் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சட்டவிரோத மனிதக் கடத்தல், பாதுகாப்பான புலம்பெயர்வு, தொழிலாளர் ...
யாழ்ப்பாணத்தில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ...
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி கொண்டு வரப்பட்ட 657 பழங்கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு தொன்மையான இடங்களும், சிலைகளும் உள்ளன. இந்த சிலைகளின் மதிப்பு, சர்வதேச அளவில் கோடிக்கணக்கில் இருக்கும். அந்த சிலைகளை கடத்தல்காரர்கள் திருடிச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு கடத்தி ...
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு எதிர்வரும் மே 03 முதல் மே 06 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி திஸாநாயக்கவுடன் ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த உரையாடலின் போது, உக்ரைன் போரில் ஒரு “சிறிய போர் நிறுத்தத்தை” மேற்கொள்ளுமாறு புதினிடம் ...
அண்மையில் நிலவு பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய விண்கலத்தின் விண்வெளி வீரர்கள் நால்வரையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது வெள்ளை மாளிகை அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது அடையாளம் காணப்படும் பறக்கும் பொருட்கள், விண்வெளி படைகள் மற்றும் ஈரான் யுத்தம் உள்ளிட்ட விடயங்கள் தொட்ரபில் ...
இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலியத் தூதுவர் டாமியானோ ஃபிராங்கோவிக், பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவைச் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, புதிய தூதுவரை பாதுகாப்புச் செயலாளர் மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடல் ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கு சத்தியக்கடதாசி மூலம் நீண்ட கால அவகாசம் கோரியிருந்த போதிலும், அவ்வளவு நீண்ட காலத்தை வழங்க முடியாது என லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு அறிவித்துள்ளது. இரண்டு வார காலத்திற்குள் சொத்து ...
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம் பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த 2 தேரர்களும் தாய்லாந்தில் தங்கியிருந்தவாறு இந்த ...