நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 11 , 12 மற்றும் 13ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்று திங்கட்கிழமை கற்பித்தல் நட வடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. எனினும் இராஜாங்கனைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படமாட்டாது. கொரோனா வைரஸ் பரவலினால் சுமார் 3 மாத காலம் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் ...
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் புதிதாக தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் கள் எங்கள் போராட்டத்திற்கும் கவலைகள், கண்ணீருக்கும் காலம் தாழ்த்தாது நீதியை பெற்றுத்தர வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர். மன்னாரில் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ...
அரசியல் ரீதியான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சந்திப்புகள், விருந்துகள் ஆகியவற்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கும் அவசியத்தை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வீடுகள் அல்லது மண்டபங்களில் ஒழுங்கு செய்யப்படும் இப்படியான வைபவங்கள் அல்லது ...
யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் போதைப்பொருளுடன் ஓட்டம் காட்டிய இளைஞனை பொலிஸார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர். சாவகச்சேரி நகரத்தில் நேற்றுப் பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. போதைப்பொருளுடன் வந்த இளைஞன் ஒருவர், பொலிஸாரைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார். அவரை குறிவைத்து நின்ற சிவில் உடை பொலிஸார், இளைஞனை விரட்டினார்கள். ...
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை ஆறு வேட்பாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்தல் சட்ட மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை களை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய குறிப்பிட்டார். இதற்காக, ...
இலங்கையின் மூத்த குடிகள் தமிழ் மக்களே என நீதியரசர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பொலிஸார் நேற்று அவரிடம் இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை செய்தனர். கொழும்பிலிருந்து விடப்பட்ட உத்தரவின் பேரில் நல்லூரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இந்த விசாரணை இடம்பெற்றது. விக்னேஸ்வரனின் அறிக்கை இனங்களிற்கிடையில் முறுகலை ...
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலை மையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நேற்று வல்வெட்டித் துறை ரேவடி உல்லாசக் கடற்கரை மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு மேடை மற்றும் கதிரைகள் என்பன மோப்ப நாய் மற்றும் கருவிகள் கொண்டு பொலிஸார் தீவிர சோதனை ...
வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டியை சுவரில் ஒட்டிய நால்வர் நேற்று இரவு வட்டுக் கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ், கிளிநொச்சி வேட்பாளர் ஒருவருடைய சுவரொட்டியை ஒட்டிய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாகனம் ஒன்றும் ஒரு தொகை சுவரொட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னார் யாழ் வீதியில் இடம்பெற்றுள்ளது. வீதியில் தரித்து நின்ற பார ஊர்தியுடன் யாழ் ...
கிளிநொச்சியில் நேற்று இடம் பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரி ழந்துள்ளார். ஏ 9 வீதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. மிதிவண்டியில் பயணித்த முதியவர் வீதியைக் கடக்க முற்பட்டபோது, வவுனியாவிலி ருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ...