கண்டி – மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர – நிசருவ பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த ...
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள கரிசல் பகுதியில் இன்று காலை மினி பஸ் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ...
கடும் மழை காரணமாக மட்டக்களப்பிலிருந்து பிபிலை ஊடாக ஹட்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ் ஒன்றிற்கு முன்னால், பசறை பகுதியில் பெரிய மரம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று சனிக்கிழமை (09) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரம் வீதியில் சரிந்து விழுந்த போதிலும், ...
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி புகையிரதம் நாளை (11) முதல் மீண்டும் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரதம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு ...
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. இலங்கையும் இந்தியாவும் மென்மேலும் ...
ஹஷீஷ் போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்தி வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று (10) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞராவார். சந்தேகநபர் இன்று ...
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ...
மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு கொட்டகலை ரிஷிகேஷ் மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபையின் ...
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நேற்று (09) மாலை இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...
யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திரவிழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குள் நடைபெற்ற இந்திரவிழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ...