நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது பெருக்கெடுத்து வருவதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (13) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தகவல் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். இவ்வாறு ...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அனுராதபுரம், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா ...
இலங்கை மற்றும் இந்திய நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நிகழ்த்தவுள்ள உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சி “சங்கமம் 2026”, எதிர்வரும் 2026 ஜூன் 14ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று ஆரம்பமாவதனை முன்னிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவு இடம்பெற்றுள்ளது. இதனை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் பொதுச்சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின்போது கஞ்சிகூட கிடைக்காது மக்கள் துன்பப்பட்டதனை ...
தென் மாகாண சபையின் முன்னாள் ஆளுநராகப் பதவி வகித்த விலீ கமகே, இன்று (11) இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். குறித்த ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணை ஒன்றிற்கு அமைவாக, வாக்குமூலம் வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே அவர் அங்கு வருகை தந்துள்ளார். ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (11) முற்பகல் பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்துள்ளார். உதய கம்மன்பில எழுதிய நூலில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றுமொரு தாக்குதல் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பொலிஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ...
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், அதில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் விசேட வைத்தியர் ஒருவர் மற்றும் அதே வைத்தியசாலையின் சிரேஷ்ட விடுதி பெண் வைத்தியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரசவத்தின் போது ...
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலை காரணமாக, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்தல், மணல் அகழ்வு உரிமங்களை வழங்குதல் மற்றும் மணல் விலையைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்களுக்கு ...
மஹியங்கனை – அராவத்தை, ஒருபெதிவெவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மனைவி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்தவர் ஒருபெதிவெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயென அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (10) இரவு ...