கொழும்புத்துறை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் திர ட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர் ஒருவர் அயலவர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை இப்பாடசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பும் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப் பட்டன என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்புப் புலனாய்வுப் ...
மன்னாரில் ஊரடங்கு காலப்பகுதியில் வீதிகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸாருக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் குளிர்பனங்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக் கான நிறுவனத்தின் உதவியுடன் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மெசி டோ நிறுவன ஊழியர்களால் நேற்று வழங்கப்பட்டன. ...
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன்குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக அக்கராயன் குளம் பொலிசார் மற்றும் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் ஆகியோருக்கு கிடைத்த தகவலை யடுத்து சம்பவ ...
மலரும் புத்தாண்டை வீட்டிலிருந்தே குடும்ப உறவுகளுடனும் இறை பிரார்த்தனையுடனும் இல்லாதவர்களுக்கு உதவும் கைங்கரியத்துடன் கடைப்பிடியுங்கள் என சைவ ஆதீனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பில் நல்லை ஆதீனம், தென்கயிலை ஆதீனம், கீரிமலை சைவ ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு முதல்வர்கள் கூட்டாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, இன்று ...
வைத்திய அட்சகரை இடம் மாற்றக் கோரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இது தொடர்பாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில், புதிதாக கடமையேற்றுள்ள பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பருத்தித்துறை ...
அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக அனுமதியைப் பெற்ற ஒருவர் சீமெந்து கொண்டு சென்ற நிலையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளதுடன் பார ஊர்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருகோணமலையில் இருந்து கிளிநொச்சிக்கு கோதுமை மாவினை கொண்டு செல்வதற்கு என அனுமதியை பெற்று பார ஊர்தியில் 400 பைக்கற் சீமெந்தினை ...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் 14ஆம் திகதி ...
பூநகரியைச் சேர்ந்தவரும் லண்டனில் வசிப்பவருமான ஊடகவியலாளர் தில்லைநாதன் ஆனந்தவர்ணன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார். 30 வயதுடைய ஆனந்தவர்ண்ணன், பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதனின் மகனாவார்.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த நபருக்கு கொரோனோ தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையை சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சில மணிநேரத்தில் ...