காரைநகர் கசூரினா கடற்கரை கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினா கடற்கரையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடியிருந்தமை அவதானிக்கப்பட்டது. அவர்கள் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார நடைமுறைகளை அவர்கள் கைக்கொள்ளாமையினால் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு மக்கள் செல்வதற்கு சுகாதாரத் தரப்பினரால் நேற்று தடை விதிக்கப்பட்டது.
கோவிட் தடுப்பூசி ஏற்றும் முதலாம் கட்டம் மூலம் மூன்று மாதங்கள் செல்லும் வரை கொரோனா வைரஸ் தொற்றும் வேகம் குறைவாகும். அத்துடன் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட முதியவர்கள் அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசியை பரிந்துரைக்கப்பட்ட காலத்திலேயே ஏற்றிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியை ...
விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடு களிலும் நடத்த முடியாது என இராணுவத் தளபதியும் கோவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். நாட்டில் கொரோனாத் தொற்று தீவிர மடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங் ...
நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப் படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். நாளை திங்கட் கிழமை பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி எதிர்வரும் ...
மேல் மாகாணத்தை தவிர்ந்த நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லையென்றும் அமைச்சர் கூறினார். மேல் மாகாண ...
கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த 9 பேரின் சடலங்கள் நேற்று அடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம். என்று சுகாதார அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய நேற்று சடலங்கள் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஓட்டமாவடி ...
கிளிநொச்சி – வட்டக்கச்சி ஒற்றைக்கை பிள்ளையார் கோவிலடி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக் கொண்டு தாயார் ஒருவர் கிணற் றுக்குள் குதித்த நிலையில் அவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட் டுள்ளார். இந்தநிலையில், ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதாக ...
அரசியல் மற்றும் சர்வதேச இராஜதந்திர நெருக்கடிகளுக்காக அமைச்சரவை தீர்மானங்கள் மாற்றப்பட மாட்டாது. யாழ். முத்தீவுகளில் சீன மின் உற்பத்தி வேலைத் திட்டம் தொடர்பான தீர்மானத்தில் எந்த மாற்றமும் இதுவரையில் கிடையாது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில், யாழில் ...
கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் உடல்களை கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரணைதீவு பகுதி மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். முஸ்லிம் சகோதரர்களால் பல்வேறுபட்ட பகுதிகள் முன் மொழியப்பட்ட போதிலும் அவற்றை தவிர்த்து ...