கொரோனாவல் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக் கான நிவாரணங்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை பெற்றுக் கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கீழ்வருமாறு, 1.முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764 பேருக்கும் முதியவர்களாக இனம் காணப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 142 345 பேருக்கும் ரூபாய் 5000 கொடுப்பனவு ...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு ஐனுர் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயது டையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது ...
கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்படுகின்றது. தற்போது அமுலில் இருக்கும் ஊரடங் குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ...
தற்பொழுது நாட்டின் பல்வேறு இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நேரத்தில் யாழ்ப் பாணத்தில் ஊரடங்கு சட்டம் மிகவும் இறுக்கமான முறையில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் கொமாண்டோ அணி களமிறக் கப்பட்டு சோதனை ...
கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் முதலாவதாக உயிரிழந்த நபரின் உடல் நேற்று அரச செலவில் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் மாரவில பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய தர்மசிறி ஜனானந்த என்பவர் உயிரிழந்திருந்தார். குறித்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது ...
யாழில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தலை ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவ்வறிக்கையிலேயே மேற் படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ...
யாழ்.மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச்சிப்பாய் பொது மன்னிப் பின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வால் விடுதலை செய்யப் பட்டுள்ளார். கொரோனா அச்சத்தால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சத்தமில்லாமல் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மரண ...
ஊரடங்கு நேரத்தில் வட மாகா ணத்தில் பலசரக்குக் கடைகளை திறக்க அனு மதி வழங்கப்பட்டுள் ளது பொது மக்கள் நடந்து சென்று பொருட்களை வாங்கு மாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமை வாக வட மாகாண ஆளுநர் செய லகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, ...
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காமல் நாட்டில் கொரோனா பரவும் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டனத்திற்குரியது என சர் வதேச மன்னிப்புச் சபை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலை யில் மிருசுவில் ...
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மீள அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்க தீர்மா னிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய ...