கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்றாவிட்டால் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது எளிதல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள அரச ...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டுக்கள் மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய ஆவா என பொலிஸாரால் விழிக்கப்படுபவரின் பிறந்தநாளைக் கொண்டாடியவர்கள் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் உள்ளிட்ட பலர் தப்பித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டம் மல்லாகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. ஆவாவின் பிறந்தநாள் ...
சந்தேகநபர்களை கைது செய்ய சென்றமையால், கொரோனா அச்சத்தில் ஒரு பொலிஸ் பொறுப்பதிகாரி, ஒரு குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பொலிஸார் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜா-எல, பமுனுகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, கெக்கிராவ பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 38 பேரே ...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 27 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்கலாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரில் நேற்று மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்த நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முற்பகல் ...
இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். ஏனைய 19 மாவட்டங்களிலும் வரும் ஏப்ரல் 9ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு ...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த செய்ய வேண்டிய சகல நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்தாலும் கூட அடுத்துவரும் நாட்கள் மிகவும் கடினமானதாக இருக்கின்ற காரணத்தினால் புத்தாண்டு வரையிலும் இலங்கையின் நிலைமையை சரியாக அறிவிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா ...
சுவிஸ் மத போதகரினால் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதையடுத்து யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும்போது ...
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத் தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது. தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து ஆலய மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்தபோது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது. ...
தனிமைப்படுத்தல் நிலையங் களில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப் பிடிக்குமாறு இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் ...
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தல் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய வருக்கு 10 நாட்களின் பின் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 10ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பிய அவர், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ...